முன்னாள் திமுக எம்எல்ஏ மரணம்

உடல் நலக்குறைவு காரணமாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானார். திமுக தலைமை நிலையச் செயலாளராளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கு.க.செல்வம் சென்னையில் காலமானார். போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் 2016 முதல் 2021 வரை எம்எல்ஏ-வாக இருந்தார். 1997-இல் அதிமுகவிலிருந்து விலகிய கு.க.செல்வம் திமுகவில் இணைந்தார். அகஸ்டு, 2020-இல் பாஜக அகில இந்தியத் தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார். இதனால் திமுக தலைமை இவரிடம் விளக்கம் கேட்டு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. தொடர்ந்து, 2021 மார்ச்-ல் பாஜகவில் இணைந்தார். 2022 நவம்பர் 27ஆம் தேதி மீண்டும் திமுகவில் இணைந்து தலைமை நிலைய அலுவலக செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
Tags :