பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் படுகாயம் 10 அறைகள் முற்றிலும் சேதம்

by Staff / 05-02-2025 05:02:47pm
பட்டாசு ஆலையில் வெடி விபத்து  5 பேர் படுகாயம் 10 அறைகள் முற்றிலும் சேதம்

விருதுநகர் அருகே கோவில் புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய பிரபா பட்டாசு ஆலை நாக்பூர் லைசென்ஸில் இயங்கி வருகிறது.இந்நிலையில் இன்று மதியம் வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அனைத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பட்டாசு வெடிவிபத்தில் பத்து அறைகள் முற்றிலும் சேதம் ஆயின.மேலும் இந்த பட்டாசு வெடிபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் விருதுநகர் மற்றும் சாத்தூர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

 

Tags :

Share via