டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்துள்ள செய்தி-அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
,பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள வேண்டி ரயிலைப் பிடிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Tags :