பீகார் ரயில் விபத்து - மீட்புப் பணி முடிந்தது
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர், மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனிடையே, மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவரது 'X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். அதில், "மீட்புப் பணிகள் முடிந்தது. அனைத்து பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டன. பயணிகள், அவர்களின் பயணத்திற்காக விரைவில் சிறப்பு ரயிலுக்கு மாற்றப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :












.jpg)






