சென்னை மக்களுக்கு உதவ தென்காசியில் குவிந்த நிவாரண பொருட்கள்

by Admin / 08-12-2023 10:28:44pm
சென்னை மக்களுக்கு உதவ தென்காசியில் குவிந்த நிவாரண பொருட்கள்

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ முன்வந்த தன்னார்வலர்கள்
சென்னை மக்களுக்கு உதவ தென்காசியில் குவிந்த நிவாரண பொருட்கள்

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள்  நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் அறிவிப்பின் பெயரில் தென்காசி மாவட்டத்தில் வர்த்தக சங்கத்தினர், தொழில் அதிபர்கள் பல்வேறு நிவாரண பொருட்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிலதிபர் பால கிருஷ்ணன் 50ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வட்டாட்சியரிடம் அளித்தார். இதேபோன்று பல்வேறு நபர்கள் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்களை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து வட்டாச்சியர் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே ஒரு வாகனம் சென்னைக்கு அனுப்பி வைத்த நிலையில், நாளை மாலை இதர பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்  தெரிவித்தார்.

 

Tags : சென்னை மக்களுக்கு உதவ தென்காசியில் குவிந்த நிவாரண பொருட்கள்

Share via

More stories