கன­மழை­யால் 50 ஆயி­ரம் ஏக்­கர் சம்பா பயிர்­கள் மழை நீரில் மூழ்கி சேதம்..?

by Editor / 07-11-2022 07:26:51am
கன­மழை­யால் 50 ஆயி­ரம் ஏக்­கர் சம்பா பயிர்­கள் மழை நீரில் மூழ்கி சேதம்..?

தமி­ழ­கத்­தில் பல்­வேறு மாவட்­டங்­களில் வட­கி­ழக்­கு பரு­வ­மழை வலுத்து வரு­கிறது. இந்­நிலை­யில், வரும் 9ஆம் தேதி வங்­கக் கடலில் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வா­கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு நிலை­யா­னது 10, 11ம் தேதி­களில் வட­மேற்கு திசை­யில் தமி­ழ­கம், புதுவை கடற்­க­ரையை நோக்கி நக­ரக்­கூ­டும். காற்றழுத்த தாழ்­வுப் பகுதி காரண­மாக, தமி­ழ­கத்­தில் மீண்­டும் பர­வ­லாக கன­மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்­னை­யைப் பொறுத்­த­வரை கடந்த அக்­டோ­பர் மாதம் 1ஆம் தேதி முதல் நேற்று முன்­தி­னம் வரை 41 சென்டி மீட்­டர் மழை பதி­வாகி உள்­ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்­த­தன் கார­ண­மாக, நான்கு நாள்­களில் மட்­டும் சரா­ச­ரி­யாக 27 சென்டி மீட்­டர் மழை பொழிந்­துள்­ளது. இதற்­கி­டையே, டெல்டா மாவட்­டங்­களில் கொட்­டித் தீர்த்த கன­மழை­யால் 50 ஆயி­ரம் ஏக்­கர் சம்பா பயிர்­கள் மழை நீரில் மூழ்கி உள்­ள­தாக விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

 

Tags :

Share via