4 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது
6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்தேரி கிழக்கு (மகராஷ்டிரா), மோகாமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், கோபால்கஞ்ச், ஆதம்பூர், தாம்நகர், கோலகோகர்நாத் ஆகிய 4 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
Tags :