2 வயதுகுழந்தை  பேருந்தின் படிக்கட்டு வழியே தவறி சிசிடிவி காட்சி  வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

by Editor / 22-01-2023 08:39:08am
2 வயதுகுழந்தை  பேருந்தின் படிக்கட்டு வழியே தவறி சிசிடிவி காட்சி  வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் வழியாக நேற்று காலை திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி  தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் அலுவலகம் செல்பவர்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் என கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது இந்த நிலையில் பேருந்து சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியை கடந்து சென்றுகொன்டிருந்தது அப்போது பேருந்தின் முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் சற்றும் எதிர்பாராமல் எந்தவித சைகையும் காண்பிக்காமல் திரும்பியதால் தனியார் பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து சட்டன் பிரேக் போட்டதால் பேருந்தின் படிக்கட்டு அருகே 2 வயது குழந்தையுடன்  நின்று கொண்டிருந்த  பெண் நிலைதடுமாறியதில் அவர் கையில் இருந்த குழந்தை படிக்கட்டு வழியாக வெளியே தெறித்து விழுந்தது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் சுதாரித்துக் கொண்டு ஓடிச்செற்று குழந்தையை  தூக்கியதால் குழந்தை பேருந்துக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டது. இந்த விபத்தில் குழந்தை காயங்களின்றி உயிர் தப்பியது. மேலும் அங்கே நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு புகார் ஏதும் இல்லாததால் பேருந்து அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு  கிளம்பிச் சென்றது. பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழும் சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுதியுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களை தற்போது பெண்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில் சாலை விதிகளை மதிக்காமல் அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் ஓட்டி செல்வதன் காரணத்தினாலே அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும்,  போக்குவரத்து காவல்துறையினர் பெண்கள் என்று இரக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யாமல் விட்டு விடுவதன் காரணமாக இதுபோன்ற விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் பெண்கள் ஓட்டிவரும் வாகனங்களுக்கு முறையான ஆவண  தனிக்கையை செய்ய வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

 

Tags :

Share via