பட்டாசு வெடி விபத்து.. நேரில் விசாரணை நடத்திய ஆட்சியர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடந்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்து வந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் செல்வராஜ், சிறுவர்கள் கார்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். போலீசாரும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Tags :