விஜயின் விழாவில் வீணாகப்போன உணவு.

தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் உணவுகள் வீணாக்கப்பட்ட சம்பவம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். அதன்பின் விருந்து அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களோடு மத நல்லிணக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வருகை தந்து அங்கு கூடியிருக்கும் இஸ்லாமியர்களுடன் இணைந்து வழிபட்டார்.மக்கள் முண்டியடித்து பிரியாணி வாங்க முயற்சித்ததால், ஆங்காங்கே உணவு பொருட்கள் சிதறி வீணானது. மேலும், சரியான திட்டமிடல் இல்லை என புகார்கள் குவிந்து வருகிறது.நோன்புதிறக்க வந்தவர்களும்,கட்சியின் நிர்வாகிகளும் மிகவும் சிரமத்தை சந்தித்தனர்.மேலும் கதவுகளும்,கண்ணாடிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியானது.
Tags : விஜயின் விழாவில் வீணாகப்போன உணவு.