சேலத்தில் கஞ்சா விற்ற மாணவர் உள்பட மூணு பேர் கைது

சேலம் அம்மாபேட்டை பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா பழக்கம் கொண்ட ஒருவரை எஸ். ஐ புவனேஸ்வரி தலைமையில் ஏட்டுகள் பாலசுப்பிரமணியம், சுரேஷ் ஆகியோர் பிடித்து விசாரணை நடத்தினர்.
எங்கிருந்து கஞ்சா வருகிறது என்ற தகவலை பெறும் வகையில் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அம்மாபேட்டையை சேர்ந்த முருகன், குமரன் நகரை சேர்ந்த சுந்தரம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 1.700 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் ரஞ்சித் கல்லூரி மாணவராவார், கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை ஆட்கள் மூலமாக வரவழைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :