காக்கா இராதாகிருஷ்ணன் அவர்கள்

by Editor / 24-07-2021 08:25:40am
காக்கா இராதாகிருஷ்ணன் அவர்கள்

காகா ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழ் திரைப்பட உலகின் ஒரு பழம் பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். 1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் சுமார்  600க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்......


பிறப்பு
காகா ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் வெள்ளையன் ஆச்சாரியார் - சுப்புலட்சுமி அம்மாள் இணையாருக்கு 2வது மகனாக பிறந்தார்...

நாடக துறை
சிறு வயதில் படிப்பில் ஆர்வம் இல்லாமல்,  தெரு கூத்து நாடக கலையில்  ஆர்வம் இருந்ததால் நாடக குழுவுடன் சேர்ந்து நடிப்பு பயணத்தை தொடங்கினார்.....தனது ஆறாம் வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார்... 


திரையுலக பணி
ராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார்.... அந்த காலத்தில் அந்த நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம் ஆனதால். இவர் காகா ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.....

அறுபது வயதுக்குப் பிறகும் நடித்த இவரது  திரைப் படங்களான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்; உன்னைத்தேடி; காதலுக்கு மரியாதை, மாயி ஆகியவற்றில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர்... இவரது பிற குறிப்பிடத்தக்க படங்களாக நல்லதம்பி, வண்ணசுந்தரி,‌ சந்திர கிரி, மங்கையர்க்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகியன உள்ளன.....


மறைவு
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன், 2012ம் ஆண்டு  ஜூன் மாதம் 14ம் தேதி  மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்... 

காக்கா இராதாகிருஷ்ணன் அவர்கள்
 

Tags :

Share via