மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்த உயிர் நண்பனை வீடு புகுந்து வெட்டி கொன்ற நண்பன்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி தனுஷ்கோடி காலனியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் வயது 24 இவரும் பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சௌமியா வயது 22 என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் செந்தமிழ்செல்வனின் வீட்டின் அருகே இருந்த உயிர் நண்பரான ஸ்டாலின்(23) இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் அருகிலுள்ள குளங்களில் மீன் பிடித்து விற்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் செந்தமிழ்ச் செல்வனின் மனைவி சௌமியாவிற்கும் ஸ்டாலினுக்கும் இடையே திருமணத்தை தாண்டிய தகாத தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சௌமியா ஸ்டாலின் உடன் மணிக்கணக்கில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியும் பேசிக்கொண்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடந்த 01.10.25 ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சௌமியா செல்போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அன்று மதியம் நடந்துள்ளது. தன் மனைவி மீதும் நெருங்கிய உயிரான நண்பன் ஸ்டாலின் மீதும் சந்தேகத்தில் இருந்த செந்தமிழ் செல்வனுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சௌமியா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியதை செல்போனில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தமிழ்ச்செல்வன் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
அதனைத் தொடர்ந்து தன் மனைவி மீது தகாத தொடர்பில் இருந்த தனது உயிர் நண்பனை கொள்ள சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதனை நிறைவேற்ற மனைவியின் தம்பி மதன்குமாரை ஃபோனில் சம்பவத்தை கூறி வரவழைத்து இருவரும் இவர்களது நண்பர்களும் சேர்ந்து அருகிலுள்ள குளத்துப் பகுதிக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்பு மது போதையில் ஸ்டாலினை மது அருந்த அழைத்துள்ளனர் அப்போது அன்று இரவு ஸ்டாலின் இவர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது இவர்களுடைய நடவடிக்கைகளை கண்டு தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று எண்ணி அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
அதன் பின் அவர் நேற்று இரண்டாம் தேதி மதியம் பழனியில் இருந்து வந்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் எனது நண்பர் செந்தமிழ் செல்வன் மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளார். மாலை நீங்களும் வாருங்கள் சம்பந்தப்பட்ட நபர்களை வரச் சொல்லி உள்ளோம் விசாரிக்கலாம் என்று காவல்துறையினர் கூறி உள்ளனர் சரி என்று எண்ணிய ஸ்டாலின் அவரது வீட்டிற்குச் சென்று அவரது தந்தை மற்றும் அவரது தம்பியுடன் படுத்து தூங்கி உள்ளார்.
அப்போது சுமார் இரவு 8 மணி அளவில் திடீரென செந்தமிழ் செல்வன் மற்றும் அவரது மைத்துனர் மதன்குமார் செந்தமிழ் செல்வனின் சித்தப்பா காந்தி மைத்துனரின் நண்பர்கள் பிரகாஷ்ராஜ் பாலமுருகன் மேலும் மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டாலினை சரமாரியாக கத்தியால் குத்தியும் அறிவாளால் வெட்டியும் உள்ளனர். அப்போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை பெரியசாமி மற்றும் சகோதரர் வெங்கடேஷ் ஆகியோர் தடுத்துள்ளார். இதில் பெரியசாமிக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்துள்ளது. ஸ்டாலின் மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்துவிட்டார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
சம்பவம் அறிந்து அம்பபிளிக்கை காவல்துறையினர் உடனடியாக ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்புசாமி செல்வகுமார். சரவணன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இறந்த ஸ்டாலின் உடல் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் அவரது தந்தை பெரியசாமி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் தங்கராசு தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து இன்று பழனி நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
Tags : மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்த உயிர் நண்பனை வீடு புகுந்து வெட்டி கொன்ற நண்பன்.