பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழாவில் உதயநிதி

by Staff / 28-02-2023 04:16:40pm
பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழாவில் உதயநிதி

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதத்தை வழங்கினார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி இன்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். மேலும், நாளை மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், சில தலைவர்களுக்கு உதயநிதி நேரில் அழைப்பு விடுக்கவுள்ளார்.
 

 

Tags :

Share via