போப் பிரான்சிஸ் உடலுக்கு அமெரிக்க அதிபர் இறுதி அஞ்சலி

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று(ஏப்.26) நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். ஏப்.21 அன்று போப் பிரான்சிஸ் மறைந்த நிலையில், அவரது உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல உலகத் தலைவர்கள் உட்பட 2.5 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி மும்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். போப்பின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Tags :