கராத்தே வீரார் ஷிஹான் ஹூசைனி உடல் இன்று மாலை நல்லடக்கம்

by Editor / 26-03-2025 04:19:22pm
கராத்தே வீரார் ஷிஹான் ஹூசைனி உடல் இன்று மாலை நல்லடக்கம்

சினிமா நடிகரும், பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் நேற்று (மார்ச் 25) சென்னையில் காலமானார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று (மார்ச் 26) காலை அவரது உடலானது ஆம்புலன்ஸ் மூலமாக அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்தில் இன்று (மார்ச் 26) மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.முன்னதாக அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக உறவினர் வீட்டில் வைக்கப்படவுள்ளது, அவரது மாணாக்கர்கள் மற்றும் ஏராளமான கராத்தே வீரர்கள், பொதுமக்கள் ஹூசைனி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via