ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Staff / 07-12-2023 04:16:58pm
ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மிக்ஜாம் புயல் எதிரொலியால் பெய்த கன மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்துள்ளது. சில பகுதிகள் சீர் செய்யப்பட்டாலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 7) செங்கல்பட்டு - காச்சிகுடா செல்லும் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் -சென்னை சென்ட்ரல் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via