அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முன், அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் த.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, அதிகாரிகள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதல்வரின் நிகழ்ச்சிகளையொட்டி, ஏராளமாக பெண்கள் இன்று காலை முதலே நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் காத்திருந்தனர்.
Tags :