அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ இணைக்க முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தனது தேர்தல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னணி நிர்வாகிகள் வெற்றிப்பெற முடியாது என்பதுடன் 25 தொகுதிகள் வரை பறிபோகும் நிலை இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அப்செட்டான இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags : ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க சம்மதம்


















