2 பெண்கள் நரபலி அதிர்ச்சி வாக்குமூலம்

கேரள மாநிலம் திருவல்லாவில் இரு பெண்கள் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக நரபலி ஏஜென்ட் ஷபி, ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதல் நரபலி ஜூன் மாதம் தரப்பட்டுள்ளது, 2வது நரபலி செப்டம்பர் மாதம் தரப்பட்டுள்ளது. விசாரணையில் மருத்துவர் பகவல் சிங் கடனில் மிகுந்த சிரமப்பட்டுள்ளார். அப்போது, போலி பேஸ்புக் மூலம், ஷபி அறிமுகமாகி, இருவரும் சந்தித்துப் பேசியது தெரியவந்தது.
இந்நிலையில், போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஷாபியின் அறிவுறுத்தலின்படி, தம்பதிகள் நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags :