ரத்தக்காயங்களுடன் வீட்டினுள் பெண் பிணம்... நகைக்காக நடந்த கொலையா...

by Admin / 25-08-2021 04:43:07pm
ரத்தக்காயங்களுடன் வீட்டினுள் பெண் பிணம்... நகைக்காக நடந்த கொலையா...

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர் மாவட்டம், அவிநாசி காமராஜ் வீதி பகுதியை சேர்ந்த விஜய் - பிரியா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 இந்த நிலையில், குழந்தைகளை பள்ளியில் சேர்த்த விஜய், வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். அவர்களது வீட்டுச் சமையலறையில் இரத்தக் காயங்களுடன், பிரியா இறந்து கிடப்பது தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரியா அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதும், தாடையில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கழுத்து பகுதியில் லேசான காயங்களும் இருப்பது தெரியவந்தது.

குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட கொலையா? அல்லது நகை கொள்ளையின் போது நடந்த கொலையா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories