தமிழக மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் அவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்ற சூழலில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Sri Lanka Navy arrests 12 Tamil Nadu fishermen