அருவிக்குச் செல்லும் பாதை மூடல் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.கடந்த இரண்டு தினங்களாக கனமழையின் காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அருவி அழகை வேடிக்கை பார்க்க அந்தப் பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பெண்கள் திரண்டு நின்று செல்பி பாயிண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் அறிவில் வெள்ளப்பெருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகின்றது இந்த நிலையில் எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இன்று சுற்றுலா பயணிகளுக்கு அந்த சிறிய பாலத்தின் மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags : Tourists shocked by closure of road to waterfall.



















