அமேரிக்கா நாசாவில் பணியாற்றும் மகனை மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர்,அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு- டிசைன் மற்றும் மருத்து பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ள நிலையில்,தற்போது அங்குள்ள சிலர் தினேஷை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாமல் மெண்டல் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும்,மயக்க மருந்து கொடுத்து மனநோயாளி என கூறி அமெரிக்கா ஜெமக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது,தான் நல்ல மன நிலையல் உள்ளதாகவும் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும்,தன்னை காப்பாற்ற வேண்டும் என அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து தன் தந்தையிடம் வீடியோவில் உரையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரல்ஆகிவருகிறது. மேலும் தன் மகனை மீட்டுத் தர அரசுக்கு மத்திய அரசுக்கும் குமரியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : Parents demand return of son who works at NASA in America.