ஜூலை 26 இல் காவிரி டெல்டாவில் முழு அடைப்பு ரயில் மறியல் பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.

காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி ஜூலை 26 இல் காவிரி டெல்டாவில் முழு அடைப்பு ரயில் மறியல்
பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி ஆர் நினைவு தின நிகழ்ச்சி மன்னார்குடி அடுத்த இருள்நீக்கி கிராமத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார் தலைமையற்றார். மண்ணியல் போராளி பாமையன் .அக்ரி மோகன் கருத்துரை வழங்கினர்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்க மறுப்பதால் 15 லட்சம் ஏக்கர் ஒருபோக சம்பா
சாகுபடியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி உச்ச நீதிமன்றத்திற்கு விரோதமாக ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறக்க முடியாது என அறிவித்துள்ளார். இச்செயல் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று தண்ணீரை பெற்று தர வேண்டும்.மத்திய அரசு ஆணையத்தின் முடிவை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடகாவில் பெற்றுத்தர முன்வர வேண்டும்.தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுத்து பெற வேண்டும்.
தொடர்ந்து மத்திய அரசு தண்ணீரை பெற்றுக் கொடுக்க மறுப்பதால் காவிரி டெலடா மிகப்பெரிய பேராபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை உடனடியாக பெற்று தர வலியுறுத்தி வரும் ஜூலை 26 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.அரசியல் கட்சிகள்,தமிழ்நாடு அரசு உட்பட அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பங்கேற்க வேண்டும். வணிகர்கள் கடையடைப்பு நடத்தி விவசாயிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.இது குறித்து வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜாவோடு தொடர்பு கொண்டு கடைகள் அடைக்க உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன் என்றார்.
கூட்டத்தில்மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர்,தென் மண்டல தலைவர் எல் ஆதிமூலம்,மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மயிலாடுதுறைதெற்கு மாவட்டதலைவர் பண்டேரிநாதன்,வடக்கு மாவட்ட தலைவர் சீர்காழிகணேசன் பிள்ளை,திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், செயலாளர் குடவாசல் சரவணன்,தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கமல்ராமன்.கௌரவ தலைவர் கருணை நாதன்,மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண்,செயலாளர் மகேஸ்வரன்,கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராவணன், தலைவர் எஸ் வி கே சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி, மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி கே கோவிந்தராஜ், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,தலைவர் ராதா, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மாங்குடி சரவணன்,பெருகவாழ்ந்தான் அன்பழகன்,நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வதுரை,உள்ளிட்ட300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Tags : ஜூலை 26 இல் காவிரி டெல்டாவில் முழு அடைப்பு ரயில் மறியல் பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.