ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் சந்தித்தார்.
ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார்..இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல், பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்...
இந்த ஆண்டு இந்தியா-இங்கிலாந்து உறவுகளுக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுத்துள்ளதாகவும், பல துறைகளில் இணைந்து பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்....
முன்னதாக, ஜூலை 2025 இல் பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போதும், அக்டோபர் 2025 இல் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் இந்தியப் பயணத்தின் போதும் இரு தலைவர்களும் சந்தித்தனர், அப்போது இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது..
பிரதமர் மோடி ஜி20 உச்சிமாநாட்டின் போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் (Emmanuel Macron) சந்தித்து பேசினார்..
விண்வெளி, எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது..
இந்தியா-பிரான்ஸ் உறவுகள் உலகளாவிய நன்மைக்கான ஒரு சக்தியாக (force for global good) தொடர்கின்றன என்று பிரதமர் மோடி இந்த சந்திப்பிற்குப் பிறகு குறிப்பிட்டார்..
இந்தோ-பசிபிக் தொலைநோக்குத் திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தொலைநோக்குத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்...
Tags :



















