அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது காரணமாக புயலாக  மாற உள்ளது

by Admin / 22-11-2025 06:15:42pm
 அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது காரணமாக புயலாக  மாற உள்ளது

 அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதன் காரணமாக புயலாக  மாற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்திப் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும்.  இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..  தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

 

Tags :

Share via