ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

4 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்ததற்கு எதிராக வழக்கறிஞர் சத்தியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு செய்தித் தொடர்பாளராக நியமிப்பதற்கு தடை விதிக்க எந்த சட்டமும், விதிகளும் இல்லை எனக் கூறி வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
Tags :