புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 14-01-2023 01:42:52pm
புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(38). புதிய கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஓட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போதும் ரவிக்குமார் மது அருந்து உள்ளார். ஊரில் உள்ளவர்களுக்கு போன் செய்து கொண்டு அப்படியே தூங்க அங்குள்ள அறைக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை ரவிக்குமார் உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்து உள்ளது. அறையில் ரவிக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை மீட்பு கீழே இறக்கி வைத்தனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories