அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா

இந்தியாவில் மிக நீண்ட காலம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 2,256 நாட்கள் பதவியில் இருந்த சாதனையை அமித்ஷா முறியடித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி, அமித்ஷா இந்தப் பதவியில் 2,258 நாட்களை நிறைவு செய்துள்ளார். முதன்முதலில் 2019 மே 30 அன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மோடியின் 2 அமைச்சரவைகளில் ஒரே பதவியில் நீடிக்கிறார்.
Tags :