இருமுனைப்போட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதி.

by Editor / 17-01-2025 11:30:18pm
இருமுனைப்போட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஜன., 17) நிறைவடைந்தது.திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஆசிரியர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், இருமுனைப் போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : இருமுனைப்போட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதி.

Share via