கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்த வடமாநில சிறுவன் கழுத்தை அறுத்து கொலை சிசிடிவி காட்சிகளை அடிப்படைகள் 2 பேர் கைது

by Editor / 06-08-2022 12:13:24pm
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்த வடமாநில சிறுவன் கழுத்தை அறுத்து கொலை சிசிடிவி காட்சிகளை அடிப்படைகள் 2 பேர் கைது

சென்னையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த வடமாநில சிறுவனின் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு செல்போனை திருடிச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை தண்டையார்பேட்டையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவாதி என்ற 17 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தால் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்த்தபோது இரண்டு இளைஞர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது. காசிமேடு புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த அந்த இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்ததில் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே புகுந்து பணம் மற்றும் செல் போனை திருட முயன்ற போது அவர்களை தடுத்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து செய்துள்ளது தெரியவந்தது.

 

Tags :

Share via