ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகவில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், இந்த நகைகள் ஓசூரில் உள்ள ஜுவல்லரி கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டது. தொடர்ந்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
Tags :