திருப்பூர் அருகே கியாஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

by Admin / 25-08-2021 04:35:34pm
திருப்பூர் அருகே கியாஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

குடியிருப்பு பகுதிக்கு நடுவில் குடோன் அமைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்காட்டுப் புத்தூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ‘கியாஸ் குடோன்’ அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்கு நடுவில் குடோன் அமைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே குடோன் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வார இறுதிக்குள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

Tags :

Share via