அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200 பொருள்களின் மீதான வரியை விலக்கி உள்ளார்.

by Admin / 16-11-2025 03:44:39am
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200 பொருள்களின் மீதான வரியை விலக்கி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200 உணவுப் பொருள்களின் மீதான வரியை விலக்கி உள்ளார். அதிகரித்து வரும் பல சரக்கு பொருள்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காபி, மாட்டு, இறைச்சி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு சாறு,பொ்ாி,கோகோ,உரங்கள்,ரசாயனபொருள்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்களின் மீதான வரியை அவர் திரும்ப பெற்றுள்ளார். இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை குறைப்பது மூலம் உள்நாட்டு நுகர்வோருக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. .இந்த நடவடிக்கை அமெரிக்கர்  செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.. உணவுப் பொருள்களின் விலையை குறைப்பதன் மூலம் பண வீக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் நிவாரணம் பெற வழிவகுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

நியூயார்க்,  நியூ ஜெர்சி, வர்சீனியா போன்ற நகரங்களில் ஜனநாயக கட்சியினர் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்ததின் காரணமாக இந்த வரி குறிப்பு நடவடிக்கையில் ட்ரம் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படுகின்றது.

 

Tags :

Share via