சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்

by Staff / 24-04-2023 02:12:47pm
சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்

கர்நாடக மாநிலம் கோலார் நகரில் உள்ள ரஹ்மத்நகரில் வெள்ளிக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜஃபர் என்ற ஒன்பது வயது சிறுவன், அதிகாலை தொழுகைக்காக மசூதிக்கு சென்றுள்ளான். அப்போது அச்சிறுவனை 20 தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கின. இதைப் பார்த்து அவ்வழியாக வந்த போலீஸ் ஏட்டு பார்த்து, நாய்களை விரட்டிவிட்டு சிறுவனை காப்பாற்றினார். இருப்பினும், சிறுவனின் வயிறு, முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo