இன்று தமிழகம் முழுவதும் எஸ் .ஐ. ஆருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.

by Admin / 16-11-2025 02:29:36pm
இன்று தமிழகம் முழுவதும் எஸ் .ஐ. ஆருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.

இன்று தமிழகம் முழுவதும் எஸ்ஐஆருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருவதாகவும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் வெளிப்படை தன்மை இன்மை என்றும் முறையான பாதுகாப்புகள் இல்லாமல் நீங்கள் செயல்முறை குறிப்பாக ஆவணங்கள் இல்லாத வாக்காளர்கள் அல்லது விளிம்பு நிலை சமூகங்களின் வாக்குரிமையை பறிக்கப்படும் என்றும் தமிழக வெற்றி கழகம் இந்த போராட்டத்தை நடத்துகின்றது.. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் கூறுகையில், வாக்காளர் உரிமைகளை பறிக்கும் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக முதல் முறையாக தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குறள்கள் தமிழக வெற்றிக்கழகம் கொடுத்து வருவதாகவும் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்ற பெயர்களை நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் அவசரக்கரையில் மேற்கொள்ள கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த திருத்த பணி வெளிப்படையாக செய்யாவிட்டால் சுமார் 6..38 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என்றும் கட்சி தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்... தமிழக வெற்றி கழகத்தினர் நடத்தும் இ போராட்டம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் உள்ள ஆபத்துகள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் இது முன்னெடுக்கப்படுவதாகவும் இது ஒரு ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாமல், ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகும். மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.. திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிகளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிக்கு எதிராக நவம்பர் 11 ஆம்  தேதிஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via