ஆஸ்திரேலியாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்... மத்திய அரசை எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்...
தேசிய பணமாக்கல் திட்டத்தை செயல்படுத்த உள்ள மத்திய அரசு, ஆஸ்திரேலியாவின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நெடுஞ்சாலை, ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம், விமானம் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியார்வசம் கொடுப்பதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த நடைமுறை ஆஸ்திரேலியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட கூடும் எனவும் ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ராட் சிம்ஸின் கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பொருளாதாரத்தின் செயல்திறனை அதிகரிக்கவே இன்றி வேறூ எதற்காகவும் தனியார்மயமாக்கலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனால் ஆஸ்திரேலியாவின் தனியார்மயமாக்கல் அனுபவத்தில் இருந்து மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags :