கார் கவிழ்ந்து அதிமுக பிரமுகர்கள் மூன்று பேர் பலி-இருவர் காயம்.

by Editor / 18-10-2022 08:20:42am
கார் கவிழ்ந்து அதிமுக பிரமுகர்கள் மூன்று பேர் பலி-இருவர் காயம்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியானார்கள்.
விபத்தில் சிக்கியது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் என்றும்,வேடந்தாங்கலில் இயங்கி வரும் இவர்களது பொக்லைன் வாகனத்தை பார்த்துவிட்டு திரும்பும் போது விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்ட பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் இறந்தவர்கள் விவரம் குறித்து சேகரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories