பிரியாணியில் பூரான்

by Staff / 30-10-2022 04:29:53pm
பிரியாணியில் பூரான்

சென்னை அடுத்த மதுரவாயல் அருகே உணவகத்தில் பிரியாணியில் பூரான் இருந்த விவகாரம் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானரகத்தில் அமைந்துள்ள பாண்டியன் அசைவ ஹோட்டலில் கடந்த 22 ஆம் தேதி வாடிக்கையாளர் உணவு அருந்திய போது பிரியாணியில் பூரான் இருந்துள்ளது.அது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் பூரான் பிரியாணி வீடியோ உடன் செய்தி தொலைக்காட்சிகளில் கடந்த 26 ஆம் தேதி வெளியானது. அதன் எதிரொலியாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo