சொகுசு கார் கவிழ்ந்து 4 பேர் பலி

by Staff / 17-02-2025 03:52:11pm
சொகுசு கார் கவிழ்ந்து 4 பேர் பலி

ம.பி.: சித்தி மாவட்டம் அமஹியா பகுதியில் கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நோக்கி சொகுசு காரில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது யாத்ரீகர்களை ஏற்றி சென்ற வாகனத்தை கடக்கும்போது சொகுசு கார் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via