தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய தமிழக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் 60பேர் வரை உயிரிழந்த நிலையில் அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்திபுதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து தமிழகமே முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், விஷ சாராய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஏராளமானார் கலந்து கொண்டனர்....
Tags : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய தமிழக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.