புதிய கார்களில் ஏற்பட்ட கோளாறு --தள்ளு தள்ளு என தள்ளிய கார் உரிமையாளர்கள் .

by Editor / 17-02-2025 11:37:28pm
 புதிய கார்களில் ஏற்பட்ட கோளாறு --தள்ளு தள்ளு என தள்ளிய கார் உரிமையாளர்கள் .

தென்காசியில் புதியதாக வாங்கிய 5 கார்களும் பழுது ஏற்பட்ட நிலையில் அதனை நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தள்ளு சென்று நிறுவனத்திடம் ஒப்படைத்த கார் உரிமையாளர்கள் --- பெட்ரோலில் கலப்படம் என கார் நிறுவனம் சமாளிப்பதாக கார் உரிமையாளர்கள் புகார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சேக் முகமது, ஆசிக், அபு, யாசர் முகமது ஆகிய நபர்கள் தென்காசி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல மெய்ஞ்ஞானபுரம் பிரபல கார் நிறுவனத்திடம் புதியதாக கார்களை வாங்கி அதனை வாடகைக்கு ஓட்டுவதன் மூலம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். கார்களை வாங்கி ஒரு வருடம் கூட முழுவதாக நிறைவடையாத நிலையில் வாகனத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த பழுதுகளை சரி செய்ய நிறுவனத்திடம் முறையிட்ட பொழுது உரிய பதில் அளிக்காமல் அதனை சரி செய்து தருவதாக ஒரு மாத காலம் இழுத்தடித்துள்ளனர். தாங்கள் ரூபாய் 10 லட்சம் முதலீட்டில் கார்களை புதியதாக வாங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் தற்போது அதற்கான தவணையை கட்ட முடியாத நிலையிலும் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதியதாக வாங்கிய கார்களை நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முற்பட்ட நிலையில் அதற்கும் கார்கள் புதிய கார்கள் ஒத்துழைக்காத நிலையில் அதனை தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் சக ஓட்டுநர்கள் உதவியுடன் தள்ளி சென்று நிறுவனத்திடம் ஒப்படைத்து பராமரிப்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த நிறுவனம் தாங்கள் எரிபொருள் நிரப்பக்கூடிய பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் ஆகையால் அடிக்கடி இவ்வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக சமாளித்துள்ளனர். புதியதாக கார்களை வாங்கி இரண்டாவது சர்வீஸ் செய்வது முடிவதற்குள்ளேயே காரின் இஞ்சினில் வேலை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது எனக்கூறி ஊழியர்களிடம் காரின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கார்களை எடுப்பதில்லை எனவும் அப்பகுதியில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
 

 

Tags :  புதிய கார்களில் ஏற்பட்ட கோளாறு --தள்ளு தள்ளு என தள்ளிய கார் உரிமையாளர்கள் .

Share via