இன்று திமுக-சிபிஐ கட்சிகள் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

by Editor / 26-02-2024 09:39:53am
இன்று  திமுக-சிபிஐ கட்சிகள் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சிபிஐ கட்சி 3 தொகுதிகள் வரை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், அதே போல் விரைவில் மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

 

Tags : இன்று திமுக-சிபிஐ கட்சிகள் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

Share via