ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்

by Editor / 08-10-2021 10:05:31am
ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். கடை களில் பொருட்கள் கீழே விழுந்து சிதறின.

இந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

இந்த நிலநடுக்கம், இரவு 10:41 மணிக்கு, வடமேற்கு சிபா மாகாணத்தில் ஏற்பட்டதாகவும் இதன் பாதிப்பு, டோக்கியோ, கவாகுச்சி நகரம், சைதாமா மாகாணம் மற்றும் மியாஷிரோ டவுண் ஆகிய பகுதிகளில் தீவிரமாக காணப்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடான ஜப்பானில், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு டோக்கியோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via