அக்.20 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் நேரடி விசாரணை

by Editor / 08-10-2021 10:07:42am
அக்.20 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் நேரடி விசாரணை

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நேரடி விசாரணை முறை கடந்த ஓர் ஆண்டாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் செயல்படுத்தஉச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.வரும் 20ம் தேதி முதல் வாரத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வழக்குகள் நேரடி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இந்த விசாரணையின்போது வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் மட்டும் கடும் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வரஅறிவுறுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டு பொது முடக்கம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை முறையை ரத்து செய்யப்பட்டது. வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் நேரடியாக விசாரிக்கலாம் என பரிந்துரை வழங்கியது.

இதையடுத்து, செப்டம்பர் 1 முதல் நேரடி விசாரணை குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும் நடந்து வருகிறது. அதேநேரம் காணொலி மூலம் விசாரணையும் நடந்து வருகிறது. ஆனால் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுமையாக நேரடி விசாரணைக்கு முறைக்கு வரவில்லை.

இந்நிலையில் வரும் 20ம் தேதி முதல் வழக்குகளில் நேரடி விசாரணையை வாரத்தில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வெளியிடப்பட்டன.அதில் கூறப்பட்டுள்ளதாவது ' பார் கவுன்சிலின் கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் வழக்குளில் நேரடி விசாரணையை கொண்டு வருகிறோம். அனைத்து வழக்குகளும் வரும்20ம் தேதி முதல் வாரத்தின் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பட்டியலிடப்படும். மற்ற நாட்களில் நீதிமன்ற அறைகளில் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மட்டும் நேரடி விசாரணைக்கு ஆஜராகலாம்.

செவ்வாய்கிழமை அனைத்து வழக்குகளும் பட்டியலிடப்படும். வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் காணொலி மூலம் ஆஜராகவும் வசதி செய்யப்படும். ஆனால் அதற்கு முந்தைய நாளில் இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் விண்ணிப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் மனுதாரருக்கு உதவியாக 3 வழக்கறிஞர்கள் ஆஜராகவே அனுமதிகப்படுவார்கள்.

கடும் பாதுகாப்பு நிறைந்த உச்ச நீதிமன்றத்துக்குள் நுழையும் போது தேவையான அடையாள அட்டைகளுடன் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களாக பயிற்சி பெறுவோர் வர வேண்டும். வழக்கில் ஆஜராகும் மனுதாரர் புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டையுடன் வர வேண்டும். ஒவ்வொரு மனுதாரரும் ஒரு உதவியாளரை அழைத்து வரலாம் ' எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via