மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலை -முதல்வரை சந்திப்பேன் -டாக்டர் கிருஷ்ணசாமி

by Editor / 06-06-2024 10:09:30pm
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலை -முதல்வரை சந்திப்பேன் -டாக்டர் கிருஷ்ணசாமி


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மோடியா? ராகுலா? என்று கருத்து மையம் கொண்டதால் அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் சக்தியாக உருவாக்க முடியாத சூழல்  ஏற்பட்டதாக அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு மற்றும் பாஜக எதிர்ப்பு என அகில இந்திய அளவில் கூட்டணி குறித்தான கருத்தக்கள் மட்டுமே பேசப்பட்டது. அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மீது எதிரான வாக்குகள் அளித்ததாக கருத முடியாது. மேலும் வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது மாற்றம் கண்டிப்பாக நிகழும் என நம்பிக்கை தெரிவித்தார். 

தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழப்பு ஏற்பட்டதால் அதிகார பொறுப்பிற்கு வந்து கனிமவள கடத்தல், இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் போனது குறித்த வருத்தம் உள்ளதாகவும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன் என கூறினார்.

மேலும் பேசிய அவர்,மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வை மிரட்டி வாங்குவதாக வாங்குகின்றனர். அந்த வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலை அறிய வழக்கறிஞர் குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வை மிரட்டி வாங்குவதாகவும் மேலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என்றும் இது குறித்து தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags : மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும்

Share via