தலைநகர் டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

by Staff / 19-04-2022 03:14:28pm
தலைநகர் டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நான்காவது  அலை அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள் கிழமை அன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500 தாண்டி இருக்கும் நிலையில் மொத்தமாக கொரோனா பதித்தோரின்  விகிதம் 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 18 லட்சத்து 69 ஆயிரம் பேர் கொரோனவல்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 26 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று 325 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் கணிசமாக உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்ந்து அண்டை மாநிலங்களின் சில மாவட்டங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories