கறுப்புத் துணியால் மூடப்பட்ட பென்னிகுயிக் சிலை இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.இதன்படி, லண்டனில் பென்னிகுயிக் சிலை கறுப்புத்துணியால் மூடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், "விவரங்களை அரசு அறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, சட்டசபையில் தெரிவிப்போம்" என்றார்.
Tags :



















