ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

by Staff / 20-05-2023 12:05:55pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை கடற்கரையில் சுற்றுலாவுக்குச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via